தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

எட்டயபுரம், டிச.25: புதியம்புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சண்முகசுந்தரம்(38). நேற்று இவர் எட்டயபுரத்தில் தனது சகோதரியின் மாமனார் இறந்த துக்க சடங்கிற்கு சென்றார். பின்னர் வடக்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் உறவினருடன் சென்று குளித்தார். அப்போது சண்முகசுந்தரம் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அருகில் இருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.

Related Stories:

>