நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கல்

நாசரேத், டிச. 25: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் திருநங்கைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் புத்தாடைகளை வழங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். டாக்டர் அன்புராஜன் வரவேற்றார். திருநங்கை எஸ்தர் பாரதி ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் சந்தித்து கிறிஸ்துமஸ் கேக் வழங்கி வாழ்த்து பெற்றார்

Related Stories:

>