முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது வேளாண் சட்டங்களை எதிர்த்து

திருவண்ணாமலை, டிச.25: வேளாண் சட்டங்களை எதிர்த்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்தது. அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மின்சார சட்டத்தை கைவிடக்கோரியும் கோஷமிட்டனர். மேலும், கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கூடாது என தெரிவித்தனர். முற்றுகை போராட்டத்துக்கு அனுமதியில்லை என தெரிவித்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: