×

அதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர் சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி எம்பி தேர்தலுக்கு பிறகு அதிருப்தி அதிகரித்திருக்கிறது

திருவண்ணாமலை, டிச.25: அதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று, திருவண்ணாமலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து இறுதிவரை தந்தை பெரியார் போராடினார். அவரது ெகாள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய ேதவை இருக்கிறது. பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிட்டு, மத கலவரங்களை பாஜ தூண்டி வருகிறது. அதற்கு, தமிழகத்தில் ஆளும் அதிமுக துணை போகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்திருக்கிறார். தமிழகத்தில் சாதிய சக்திகள் வலு கொண்டுவருவது வேதனை அளிக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக சொல்கிறார். மீண்டும் அதற்கான பணிகள் தொடங்கினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடும்.

நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலில் போட்டியிடுவதால், கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜவின் கட்டாயத்தின் பேரில்தான் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்காக அரசியலில் இறக்குவதாகவும் பேச்சு இருக்கிறது. அதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எம்பி தேர்தலைவிட தற்போது அதிருப்தி அதிகரித்திருக்கிறது. நடிகர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதிமுக, பாஜ கூட்டணியை யாராலும் பாதுகாக்க முடியாது.

மதசார்பற்ற திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களுடைய இலக்கு. ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக இருக்கிறார். எனவே, மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளர் கருப்பு கருணா மறைவைெயாட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அப்போது, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், வக்கீல் அபிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,BJP ,state secretary ,CPM ,election ,
× RELATED பணம் கொடுக்கும் கட்சிகள் மீது...