ஊட்டி, டிச. 25: ஊட்டியில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக 100 அடி உயர கொடி கம்பம் நடப்பட்டு, தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 78 ரயில் நிலையங்களில் 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் நடப்பட்டு, அதில் தேசிய கொடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள ரயில் நிலையத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இக்கொடி கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.