×

குலசை தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் வீதியுலா

உடன்குடி, செப். 30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். லசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த 23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு கோலங்களில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. 6ம் நாளான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை சமயசொற்பொழிவு, மாலை 5 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு மெல்லிசை, இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kulasai Dasara festival ,Mahishasuramardini ,Udangudi ,Dasara festival ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Amman ,Dasara festival of ,Lasekaranpattinam Mutharamman Temple ,
× RELATED கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று...