×

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம்

ஈரோடு,டிச.25: பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி அறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், நெய்யப்படாத பைகள், நெகிழி தட்டுகள், பேப்பர் கோப்பைகள், நெகிழி குவளைகள், அதிக அடர்வு கொண்ட பைகள், பாலி எத்திலீன் பூசப்பட்ட பலகைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து வந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், கடந்த மாதம் அரசாரணை வெளியிட்டு உள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள குறைந்த பட்ச வங்கி கடன் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அடுத்தாண்டு மே மாதம் 23ம் தேதி வரை பெறப்படும். இது தொடர்பாக மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : companies ,
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!