×

குமுளி மலைச்சாலை மூடல் கேரளா செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக இயக்கம்

கூடலூர். டிச. 25: குமுளி மலைச்சாலை மராமத்து பணிக்காக நேற்று முதல் மூடப்பட்டதால் கேரளா செல்லும் வாகனங்களை, போலீசார் கம்பம்மெட்டு வழியாக அனுப்பி வைத்தனர். தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, பாலங்கள் அமைக்கும் பணி மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதில் குமுளி மலைச்சாலையில் சிறு, சிறு பாலங்கள் மற்றும் மராமத்து பணி டிச.24 துவங்கி டிச.31 வரை நடைபெறும் என்றும், அதுவரை குமுளி வழி சாலை தற்காலிகமாக மூடப்படும் என்றும், அதற்கு மாற்று வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அதன்படி பணிகள் துவங்கியதால், நேற்று காலை முதல் கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெயின் ரோடு கம்பம்மெட்டு பிரிவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி கம்பம்மெட்டு வழியாக அனுப்பி வைத்தனர்.

Tags : mountain road ,Kerala ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...