சுருளி அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கம்பம், டிச. 25:தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற அருவி சுருளி அருவி. இங்கு கொரோனா தொற்று பரவலால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா ஊடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பூங்காகள், தியேட்டர்கள், கேளிக்கை மால்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றால்ம், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுருளி அருவியில் மட்டும் குளிக்க இதுவரை அனுமதிக்கவில்லை. இதனால் சுருளி அருவி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில், ‘குற்றாலம், ஒகேனக்கலில் கூட குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு விட்டது.

ஆனால் சுருளி அருவியில் இதுவரை குளிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சுருளி அருவியில் குளிக்க வித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>