தேனியில் வணிகர் சங்க ஆண்டு விழா

தேனி, டிச. 25: தேனியில் மாவட்ட  வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் திருவரங்கநாதன், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஏற்படுத்த வேண்டும். தேனியில் மேம்பாலம் கட்டுவதாக அரசு அறிவித்து வருகிறது.

இந்த மேம்பாலத்தால் சுமார் 2000 வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் இதுபோல் ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லி கொண்டு பல மாவட்டங்களில் பல பணிகள் நடந்து வருகிறது. இதில் வர்த்தகர்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டு தற்போது வரை அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. எனவே அண்டை மாநிலங்களில் சாலை விரிவாக்க பணிக்கு வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல், இங்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார். இதில் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>