×

கேளிக்கை விடுதியை மூடக்கோரி கடல்தொழிலாளர் சங்கம் போராட்டம்

மண்டபம், டிச.25: மண்டபம் அருகே கேளிக்கை  விடுதியை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் பேரூராட்சி தோப்புக்காடு-தோணித்துறை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்படும்  தனியார் கேளிக்கை விடுதியை அப்புறப்படுத்த வலியுறுத்தி சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் மீன்பிடி வலைகள், மிதவைகளை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடைபெற்றது.

கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். தோப்புக்காடு கிராமத்தலைவர் பால்ச்சாமி, தோப்புக்காடு கிராம மகளிர் சங்க தலைவர் மனோகரி, தோணித்துறை ரூபன் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜஸ்டின், மாவட்ட பொருளாளர் சுடலைக்காசி, ராமேஸ்வரம் கடல் தொழிலாளர் சங்க  தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கல்யாணசுந்தரம், மண்டபம் கடல் தொழிலாளர் சங்க தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் வட்டாட்சியர் முருகவேல், காவல் ஆய்வாளர் ஜாக்குலின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறுகையில், கேளிக்கை விடுதி நிர்வாகம் மீது  மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி இருந்தாலும் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கேளிக்கை விடுதி தொடர்ந்து செயல்பட்டால் போராட்டங்கள் மீண்டும் தொடரும் என்றார்.

Tags : protests ,Fishermen's Association ,nightclub ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...