கமுதி தெற்கு, மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

கமுதி, டிச.25: கமுதி தெற்கு மற்றும் மத்திய திமுக ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கமுதி தெற்கு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு திமுக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கமுதி தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக காடமங்கலத்தை சேர்ந்த மனோகரன், கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளராக வண்ணான்குளத்தை சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக ஏற்கனவே சின்னஉடப்பங்குளத்தை சேர்ந்த வாசுதேவன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: