×

ராமசாமிபட்டியில் திமுக கிராமசபை கூட்டம்

கமுதி, டிச.25: கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் மாரியப்பன், தங்கமணி, ஒன்றிய துணைச் சேர்மன் சித்ராதேவிஅய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேகரிக்கப்பட்ட மனுக்கள் திமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.

நிகழ்ச்சியில் ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் காசிலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனிக்கோடி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராஜ், மாரிமுத்து, முத்துகிளி, அ.பள்ளபச்சேரி கிளைச் செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கமுதி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,DMK Gram Sabha ,Ramasamypatti ,
× RELATED இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்