ஆர்ப்பாட்டம்

அவனியாபுரம், டிச. 25: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவனியாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பரங்குன்றம் தொகுதி விசிக செயலாளர் பனையூர் சேகர் தலைமை வகித்தார்.தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் பாண்டியம்மாள் உட்பட 100க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், ‘விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷமிட்டனர்.

Related Stories:

>