×

பெரியார் சிலைக்கு திமுக மரியாதை

மதுரை, டிச. 25: பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேற்று பெரியாரின் நினைவு தினமாகும். இதனையொட்டி, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம் (வடக்கு), கோ.தளபதி (தெற்கு) ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் மதிமுக சார்பில் மாவட்டச்செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் உள்ளிட்டோர், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் செல்வம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சுப முருகானந்தம், அ.முருகானந்தம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நிர்வாகி மணியமுதன் உள்ளிட்டோர் தமுக்கம் தமிழன்னை சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கதிரவன் தலைமையிலும், தமிழ்ப்புலிகள் சார்பில் பொதுச்செயலாளர் பேரறிவாளன் தலைமையிலும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல் பல அரசியல்கட்சியினர், திராவிடர் அமைப்பினர், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : DMK ,Periyar ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி