எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சிக்கு அழைப்பில்லை; அதிமுக எம்எல்ஏவிடம் கட்சி நிர்வாகி வாக்குவாதம்: சோழவந்தான் அருகே பரபரப்பு

சோழவந்தான், டிச. 25: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச்சிலைக்கு, தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில்,

அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானிலிருந்து அதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆனால், உள்ளூரில் உள்ள பல நிர்வாகிகளுக்கு தகவல் தரப்படவில்லை என தெரிகிறது. இதனால், கோபமுற்ற பாலகிருஷ்ணாபுரம் கிளை நிர்வாகி ஈஸ்வரன் என்பவர், ‘கட்சி நிகழ்ச்சிக்கு எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என மாணிக்கம் எம்எல்ஏவிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். அதிமுக எம்எல்ஏவிடம் அக்கட்சி நிர்வாகியே வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>