×

சித்துராஜபுரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு

சிவகாசி, டிச.24: சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பரிசோதனை முறை, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுகின்ற ஊட்டச்சத்து இணை உணவுகளை பார்வையிட்டு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.மனோகரன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் பலராம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தெய்வம், தொழில் அதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மேற்கு மாவட்ட பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amma Mini Clinic ,
× RELATED அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை