கமுதி அருகே பஸ் வசதி இல்லாததால் அவதியடையும் மக்கள்

கமுதி, டிச.24:  கமுதி அருகே பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். கமுதி அருகே நகரத்தார்குறிச்சி என்ற கிராமத்திற்கு கமுதி கோட்டைமேட்டில் இருந்து நாராயணபுரம் வழியாக செல்லலாம். அபிராமம் பகுதியிலிருந்தும் செல்லலாம். இக்கிராமத்திற்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. நகரத்தார்குறிச்சி அருகே முதுவிஜயபுரம், புல்லந்தை, தீர்த்தான் அச்சங்குளம் போன்ற கிராமங்கள் உள்ளன.

இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் வெளியூர் சென்று வர பேருந்து வசதியே கிடையாது. இப்பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளதால் மேல்நிலை பள்ளி செல்லும் மாணவர்கள் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அபிராமம் மற்றும் கமுதி போன்ற ஊர்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதிகளில் மருத்துவ வசதி இல்லாததாலும் அவசர சிகிச்சைக்குசெல்பவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் விளைபொருள்களை, அதிகமான செலவில் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். எனவே இப்பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்  முத்துவிஜயன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: