×

நல்லாட்சி தரும் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: நகரசபை கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு

ராமநாதபுரம், டிச.24:   ராமநாதபுரம் நகர திமுக சார்பில் 12வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்றார். கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடன் நிறைவேற்றிக் தருவோம் என்று அவர், உறுதியளித்தார். இதில் மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன், நகரச் செயலாளர் கார்மேகம், அவைத்தலைவர் கோகுல முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர் ஸ்டாலின் உள்படஏராளமானோர் பங்கேற்றனர்.

மண்டபம் மேற்கு ஒன்றியம், கும்பரம் கிராமத்தில் பொறுப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கிருபானந்தம், அதிமுக ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும் எடுத்து கூறினார். பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிப்போம் என்று குரல் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் துளசிதேவி, கணேசன், சந்திரசேகர் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், நாகுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேச்சியம்மாள், ஜெயச்சந்திரன், சுகந்தி சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் புல்லாணி  ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள்.

அதிமுகவை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பொதுமக்களும் தங்கள் ஊராட்சியில் அதிமுக அரசால் படும் அவலத்தையும், குறைபாடுகளையும் குற்றங்களை மனுவாக அளித்தார்கள். மண்டபம் பேரூராட்சி கிராம சபை கூட்டம் மீனவர் காலனியில் செயற்குழு உறுப்பினர்  குணசேகரன் தலைமையில் நடந்தது. நகர் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார்.

மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பூவேந்திரன், ஒன்றிய துணை செயலர் தில்லைகுமார், மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் அயூப் கான், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர் அமைப்பாளர் வெள்ளைச்சாமி, மாணவரணி செயலாளர் கோகுல் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதியோர் ஓய்வூதியம், குடிநீர், சாலை வசதி தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திமுகவில் இணையுங்கள் என 91710 91710 என்ற அலைபேசி எண்ணுடன் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படம் அச்சிட்ட 2021 பாக்கெட் காலண்டர் வீடுகள் தோறும் வழங்கப் பட்டது.

தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலங்களை போக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு நல்லாட்சி தரும் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என்றார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை கிராமத்தில் நகர் செயலாளர் புரோஸ் கான் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், தொகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Tags : DMK ,Executives ,city council meeting ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்