சத்துணவு ஊழியர் போராட்டம்

மதுரை, டிச.24: காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்தில் சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான பணியும், காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சோலையன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனையடுத்து தங்களது கோரிக்ைக மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

Related Stories:

>