×

ஞானஒளிவுபுரம் எல்ஐசி கிளையை மாற்ற எதிர்ப்பு

மதுரை, டிச.24: மதுரை ஞானஒளிவுபுரத்தில் இயங்கும் எல்ஐசி நகர் கிளையை, குட்செட் தெருவில் உள்ள கிளை ஒன்றுக்கு மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இதனை மாற்றக்கூடாது என ஞானஒளிவு புரம் கிளை அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது குறித்து எல்ஐசியின் என்எப்ஐஎப்டபிள்யூஐ வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தற்போது எல்.ஐ.சியின் மதுரை மண்டல நிர்வாகம், ஞானஒளிவுபுரம் கிளையை குட்செட் கிளைக்கு மாற்றும் முயற்ச்சியில் உள்ளது.

ஏற்கனவே அங்கு மூன்று அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்கள் நிறுத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாற்றத்தால் 70 சதவீத பாலிசிதாரரை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஞானஒளிவுபுரம் கிளையில் கிராமப் பகுதியை சேர்ந்த பாலிசிதாரர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் வந்து செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்படும். இதே பகுதியில் வேறு ஒரு இடத்தில் போக்குவரத்து நெருக்கடி இல்லாத பகுதிக்கு மாற்றினால், பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்கள், ஊழியர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்’’ என்றார்.

Tags : branch ,LIC ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...