கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை, டிச.24: கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து காரில் மதுரைக்கு 85 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கம்மாளப்பட்டியை சேர்ந்த கணேசன்(42), ஆந்திராவைச் சேர்ந்த ராண்டே அச்சுத பாபு (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பத்மநாபன், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>