மலைவேடன் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் திண்டுக்கல் கோட்டாட்சியர் ஆபீசில்ஜன.7 முதல் தொடர் காத்திருப்பு மாநில தலைவர் அறிவிப்பு

திண்டுக்கல், டிச. 24: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைவேடன் சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று மலைவேடன் மக்களுடன் சென்று சங்க மாநில தலைவர் டில்லிபாபு கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையி–்ல், ‘தமிழ்நாட்டில் மலைவேடன் சமூக மக்கள் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் 25 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பிரிந்து கடந்த 35 ஆண்டுகளாக மலைவேடன் சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் தராமல் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் புறக்கணித்துள்ளது. 1977ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் தயாரித்த பழங்குடி இன மக்கள் பட்டியலில் மலைவேடன் சாதியும் இடம் பெற்றுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், வருவாய் கோட்டாட்சியர்கள் கடந்த 2, 3 தலைமுறைகளாக திட்டமிட்டு சலுகைகளை பறித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை இயக்குநர், கூடுதல் தலைமை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும் பெற்றோருக்கு என்ன சாதிச்சான்றிதழ் இருக்கிறதோ அதனை பிள்ளைகளுக்கும் தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் கூட அதையே பரிந்துரைத்துள்ளது. ஆனால் இன்று வரை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மலைவேடன் சமூகத்திற்கு சாதிச்சான்றிதழ் வழங்கவில்லை.

அதேநேரம் மதுரை மாவட்டத்தில் மலைவேடன் சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. எனவே திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சாதிச்சான்றிதழ் வழங்க கோரியும் வரும் ஜன.7ம் தேதி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 1000க்கும் மேற்பட்ட மலைவேடன் மக்களை திரட்டி சாதிச்சான்றிதழ் பெறும் வரை மிக பிரம்மாண்டமான காத்திருக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம்’ என்றார்.

Related Stories:

>