×

20 சதவீத இடஒதுக்கீடு கோரி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல், டிச. 24:வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டி தமிழகம் முழுவதும் பட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து நேற்று தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு பாமக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சோலைராஜன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி செயல்அலுவலரிடம் மனு அளித்தனர்,

அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி தலைமையில் பலர் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி மனு அளித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் கழக தலைவர்கள் லட்சுமணன், ரூபன், விவசாயிகள் சங்க பிரமுகர் நிக்கோலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகிக்க, ஒன்றிய துணை செயலாளர் பெருமாள், இளைஞரணி செயலாளர் கருப்பையா, மாணவரணி செயலாளர் விக்னேஷ், மகளிரணி நிர்வாகிகள் ஈஸ்வரி, பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நத்தம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகிக்க, செயலாளர் ஜான்கென்னடி, தொகுதி அமைப்பு செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய செயலாளர் மூக்கன், நகர செயலாளர் பொன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : offices ,
× RELATED நகர திமுக அலுவலகம் திறப்பு