சித்தரேவில் கோழி கடையில் சிலிண்டர் திருட்டு: வாலிபர் கைது

பட்டிவீரன்பட்டி, டிச. 24: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவர் அதே ஊரில் கோழிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 காஸ் சிலிண்டர்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஜாகீர்உசேன் அளித்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் நெல்லூரை சேர்ந்த விவேக் (23), செந்தில்வேல் (24) ஆகியோர் கோழி கடையில் காஸ் சிலிண்டர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவேக்கை கைது செய்து, 2 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள செந்தில்வேலை தேடி வருகின்றனர்.

Related Stories:

>