பொங்கலுக்கு தயாராகும் செங்கரும்பு

கோபால்பட்டி, டிச. 24: சாணார்பட்டி அருகே கொசவபட்டி, தவசிமடை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பொங்கல் திருநாளையொட்டி செங்கரும்பு பயிரிட்டனர். தற்போது இவை நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இப்பகுதியில் விளையும் கரும்புகளை தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவர். கடந்தாண்டு 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது. இந்தாண்டு போதிய மழை இல்லாததால் குறைந்த பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் கரும்புகள் நன்றாக வளர்ந்துள்ளன.

 மேலும் தொடர் மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தும் பணியிலும், சோகைகளை அகற்றும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு முழு கரும்பு வழங்குவதாக அறிவித்ததும், குறைந்தளவே பயிரிட்டிப்பதாலும் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்பு விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி வாணரசி கூறுகையில், ‘கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாணார்பட்டி பகுதியில் செங்கரும்பு குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: