×

ஒட்டன்சத்திரம் புறவழிசாலையில் தெருவிளக்கு இல்லை

ஒட்டன்சத்திரம், டிச. 24: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கேகே. நகரில் காமராஜர் காய்கறி மார்க்கெட், நீதிமன்றம், மண்ணெண்ணெய் பல்க், மாட்டு சந்தை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் தினமும் இப்பகுதிக்கு 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் சாலை செல்வதற்கு இப்பகுதி முக்கிய வழித்தடமாக உள்ளது.

இங்கு செக்போஸ்ட் வழியாக வரும் பகுதியில் மின்விளக்குகள் இல்லாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. எனவே இப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைத்து தொடர் விபத்து, திருட்டை தடுக் வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...