ஆவடி, டிச.24: ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு, பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கியுள்ளார். அதே பகுதி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த அக்டோபர் மாதம் காப்பக வாட்ச்மேன் திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (40) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு சிறுமியை, அவரது தாயார் பெங்களூரு அழைத்துசென்றுள்ளார். அப்போது தான் மகளுக்கு, வாட்சுமேன் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் தாயார், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்தார். கமிட்டி தலைவர் வனஜா முரளிதரன், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா விசாரணையில், வாட்ச்மேன் தேவேந்திரன், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தேவேந்திரனை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர்.