திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம்

சென்னை, டிச. 24: அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: பூவிருந்தவல்லி நகரச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவேந்திரன்  அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின், மாவட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் புதிய நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருமழிசை கண்ணன், மாவட்ட செயலாளர் பென்ஜமின், மாவட்ட இணைச்செயலாளர் மணிமேகலை தேவேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் புலவர் ரோஜா, ஜனார்த்தனம், பொருளாளர் ஜாவித் அகமத், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பூவை.ஞானம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஏழுமலை, சொக்கலிங்கம், ராமன், தாமஸ், ரவிச்சந்திரன், சந்திரன், விஜயகருணாகரன், உமாசந்திரன், வயலை ராஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.

புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அரசு, மாவட்ட துணைத்தலைவர்கள் பெருவை சேகர், தங்கமணி, சிவப்பிரகாசம், மாவட்ட செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட இணைச்செயலாளர்கள் நாகநாதன், செளந்தரபாண்டியன், சங்கர், அரிக்குமார், விஜயகுமார், கோட்டீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பிரேம்நாத், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், ராஜேஷ், நவீன்ராஜ், மாவட்ட செயலாளர் பூத்தப்பட்டு ஜெயபால், மாவட்ட இணைச்செயலாளர்கள் சல்மான் ஜாவித், ஜெய்சங்கர், கோபிநாத், தினேஷ், மூர்த்தி, வினோத்குமார், சஞ்சய்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்டத்தலைவர் பொம்மி முனுசாமி, மாவட்ட தலைவர்கள் காவேரி தேவராஜன், தைலம்மாள், ரமாதேவி, மாவட்ட செயலாளர் மஞ்சுளா, மத்திய மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பிரதீப், மாவட்ட துணைத்தலைவர்கள் பிரசாத், பிரதாப், வெங்கடேசன், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் நீலமேகம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆனந்தன், லோகேஷ்குமார், பாபு, மாவட்ட செயலாளர் காமதேனு. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட துணை தலைவர்கள் முரளி, முத்துரங்கன், ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் அந்தமான் கே.முருகன், சிறுபான்ைமயினர் நலப்பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் ஜின்னா, மாவட்ட துணைத்தலைவர்கள் சாம்சன், ஷேக் அலி, அன்சாரி, விவசாய பிரிவு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரன், மூர்த்தி, ஜானகிராமன், மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>