×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.48 லட்சத்தில் 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைச்சர் கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, டிச. 24: தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனையும், தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவியினையும் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கருவிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லிக்யுட் ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு புதிய படுக்கைகளுடன் வார்டுகள் துவக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 6ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லிக்யுடு ஆக்சிஜன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 6ஆயிரம் லிட்டர் லிக்யுடு ஆக்சிஜன் கன்வர்டாகி கேஸ்சாக மாற்றும்போது 56 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் கேஸ்சாக நோயாளிகளுக்கு கிடைக்கும். மேலும் டீன் அலுவலகத்தில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவினை நேரடியாக கண்காணிக்க நவீன தொலை கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் முதன்முறையாக மருத்துவமனை டீன் அலுவலகத்தில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, மூச்சு விடும் தன்மை, இ.சி.ஜி மற்றும் இருதய இயக்கத்தையும் அதன் தன்மையையும் 24 மணி நேரமும் கண்காணிக்கலாம். இதில் மாற்றம் தெரிந்தால் கால தாமதமின்றி உடனடியாக சிகிச்சை செய்வதற்கு மிக அவசியமானது. இந்த கருவி ஒரே நேரத்தில் 16 நோயாளிகளை கண்காணிக்கின்ற வசதி உடையது.

இந்தாண்டு தமிழர் திருநாளை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும்  ரூ.2500 வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 4,92,702 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.123 கோடி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதன்முதலாக ெஜயலலிதா தான் துவக்கி வைத்தார். தற்போது முதல்வர் இன்னும் மேம்படுத்தி ஏழை, எளியவர்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Kadamburraju ,Thoothukudi Government Hospital ,
× RELATED வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு...