×

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, டிச. 24: தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு 25.12.2020ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை, 1.1.2021 புது வருட பிறப்பின் போது தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் விண்ணப்பப்படிவம், உரிம கட்டணமாக ரூ.500யை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய அசல் செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் 2, வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் அதன் தீர்வை ரசீது நகல், சொந்தக் கட்டிடம் எனில் தீர்வை ரசீறிதின் நகல், ஆதார் அல்லது ஸ்மார்ட் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் வழங்கக் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தேர்வு செய்து அத்தகைய ஆட்சேபணை இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : firecracker shops ,centers ,Thoothukudi district ,
× RELATED வாக்கு சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கு...