சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழா அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

சங்கரன்கோவில், டிச. 24:  சங்கரன்கோவிலில் நேற்று நடந்த அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என திரளானோர் பங்கேற்று வாழ்த்தினர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், அதிமுக மகளிர் அணி மாநில துணை செயலாளருமான ராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும் மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நன்னீராட்டு விழா சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் உள்ள ஏஞ்சல் பள்ளி மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறுமிகளை வாழ்த்தினர்.

விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி வரவேற்றுப் பேசுகையில், ‘‘எளிமையான என் அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், இந்நாள், முன்னாள் எம்பி., எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த முன்னோடிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தும் விவசாயிகளின் காவலர் எடப்பாடி, இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். நெல்லை தென்காசி மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதை வரும் சட்டசபை தேர்தல், நிச்சயம் நிரூபிக்கும். அதன் சாட்சியாக மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார். இதேபோல் ஒரு நன்றி அறிவிப்பு கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும்’’ என்றார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ், அன்பழகன், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர்  கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் மனோகரன், இன்பத்துரை, ரெட்டியார்பட்டி நாராயணன், தென்காசி கலெக்டர் சமீரன், நெல்லை கலெக்டர் விஷ்ணு,  தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கோகுலஇந்திரா, மணிகண்டன், பாஜ மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி, நெல்லை கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் கண்ணன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, நகரச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏக்கள் தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன், மைக்கேல் ராயப்பன், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர்கள்  கல்லூர் வேலாயுதம், நாராயணபெருமாள், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர்  ஜெகநாதன், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர்கள் லாரன்ஸ், வை சின்னத்துரை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

மேலும் விகேபி சங்கர், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், தேவேந்திர சட்ட பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் மதுரம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் வன்கொடுமை கண்காணிப்பு குழு மாவட்ட உறுப்பினர் கேஎஸ்எஸ் மாரியப்பன், வக்கீல் புங்கம்பட்டி ராஜசேகர், ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ், ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், குருவிகுளம் கிளைச் செயலாளர் மோகன்சாமி, திருவேங்கடம் பேரூர் செயலாளர் சங்கர், சங்கரன்கோவில் 18வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முத்துக்குட்டி மற்றும் சங்கரன்கோவில் ஆர்டிஓ முருகசெல்வி, நகராட்சி ஆணையாளர் முகைதீன்அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர், மாணவரணி தச்சை பகுதி செயலாளர் சுஜின்ராஜா, அதிமுக முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், வடகரை ராமர், அரசு ஒப்பந்ததாரர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, லாசர், பழனிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>