×

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள்

ஊத்துக்கோட்டை, செப்.27: ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், குணசேகர் தலைமை தாங்கினர். ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்து மருத்துவ பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். பின்னர், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர். மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 திருத்தணி நகராட்சி, 10 மற்றும் 1வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற முகாமில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமை, திருத்தணி நகர்மன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். தகுதியான 10 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நகரமன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். காலை முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் 854 மனுக்கள் பெறப்பட்டது.

Tags : Stalin ,Uthukkottai ,Thombarampedu ,Manisekar ,Gunasekar ,Tahsildar Rajesh Kumar ,DMK Executive Committee ,P.J. Murthy ,General Committee… ,
× RELATED போதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி 5 வாகனம் சேதம்