×

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு பாளை மண்டல அலுவலகம் முற்றுகை

நெல்லை, டிச. 24: கல்வி  மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாளை மண்டல அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டு மனு  அளித்தனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு  20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நெல்லை மாநகர மாவட்ட பாமக சார்பில் நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளரிடமும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 10  பேரூராட்சி அலுவலகங்களில் செயல் அலுவலரிடமும் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.

பாளை மண்டல  அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில்  நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி ஆணையாளரிடம் கோரிக்கை மனு  அளித்தனர். இதில் மாநில துணை செயலாளர் நெல்லை அன்பழகன், மாநில இளைஞரணி  துணை தலைவர் அந்தோணிராஜ், மாநகர தலைவர் எட்வின் நம்முடையார், மாநில  மாணவரணி ஜீசஸ் ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஹரிகரன், மணி, அமைப்பு தலைவர் மகாராஜன், தொண்டரணி செயலாளர் கருப்பசாமி மற்றும் மாவட்ட, ஒன்றியம், வார்டு, கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Tags : Siege ,Pali Regional Office ,Vanni ,
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...