விண்ணப்பங்கள் வரவேற்பு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.24: கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி திருச்சியில் பாமகவினர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பாமக சார்பில் திருச்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் எழிலரசன் தலைமையில், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories:

>