×

விண்ணப்பிக்க அழைப்பு கல்லூரி முதல்வர்களுடன் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நெறிமுறைகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது நடவடிக்கை


திருச்சி, டிச.24: மாவட்ட சுகாதாரத்துறை மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுடன், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் திருச்சி கலெக்டர் அலுலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது:  திருச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஓரளவிற்கு மற்ற மாவட்டங்களைவிட நோய் தாக்கம் குறைந்துள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்லூரிகளிலும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து கல்லூரிகளிலும் உள்ள வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். மாணவர்களும், பேராசிரியர்களும், பணியாளர்களும் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உணவு விடுதியில் மாணவர்கள் சாப்பிடும் போது கூட்டமாக சேர்ந்து சாப்பிடுவதை கண்காணித்து தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் உள்ள மாணவர்களுக்கு எவருக்கேனும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தெரியப்படுத்தாத கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வருவதில்லை. ஒரு வகுப்பறையில் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அந்த வகுப்பறையை மூடவேண்டும் என்றார். மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் இணை இயக்குநர் மருத்துவம் டாக்டர் லட்சுமி, துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் மேகலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : colleges ,meeting ,Corona ,
× RELATED இலவச கண் சிகிச்சை முகாம்