கலெக்டர் எச்சரிக்கை ரங்கம் பூ மார்க்கெட்டிலிருந்து திருப்பதி தேவஸ்தான கோயில்களுக்கு 700 வண்ண மாலைகள் அனுப்பி வைப்பு

திருச்சி, டிச.24: ரங்கம் பூ மார்க்கெட்டிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட, கீழ் திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்பட 20 கோயில்களுக்கு மூலவர், உற்சவர், உபயநாச்சியார்கள் மற்றும் சுற்றுச் சன்னதிகளில் உள்ள ஆழ்வார், ஆச்சார்களுக்கு பிச்சிப்பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களைக் கொண்டு பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட 700 மாலைகள் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மூலம் நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூலவர்கள் கோவிந்தராஜ பெருமாள் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு 9 அடி உயரத்திலும், ஒன்றரை அடி அகலத்திலும், பிற கோயில் மூலவர்களுக்கு 5 முதல் 7 அடி உயரத்திலும், உற்சவர்களுக்கு 2 முதல் 3 அடி உயர மாலைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

Related Stories:

>