கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 24: கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணி கொடையை ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு சட்டபூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பண பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>