×

தற்காலிக பணி முகமைகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, டிச.24: பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பணித்தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் திருந்திய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித்தேர்வு முகமை மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணித்தேர்வு முகமை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளின் தேர்வுப் பணி, அறுவடைப்பணி, அதைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலைப் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், வேளாண்மைத்துறை, புள்ளியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆர்வமுள்ள அலுவலர்களும் தேர்வு செய்ய பரிசீலக்கப்படுவர். மாதாந்திர தொகுப்பூதியமாக சேவைக் கட்டணம், ஜிஎஸ்டி, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்பட ரூ.15,050 வீதம் பணித்தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.

பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணி நியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது அடிப்படை விவரங்கள், அனுபவம், பணியாளர்களை பணியமர்த்த பெறும் சேவை கட்டண விவரம் ஆகியவை அடங்கிய விண்ணப்பங்களை ‘வேளாண்மை இணை இயக்குநர், மன்னார்புரம், திருச்சி என்ற முகவரிக்கு 2021 ஜனவரி 4ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வாகும் முகமை ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : employment agencies ,
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...