×

கிறிஸ்துமஸ் விழா பெயர் சேர்த்தல், நீ்க்கம், திருத்தம் தொடர்பாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன

திருச்சி, டிச.24: திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,531 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான இரண்டு சிறப்பு முகாம்களை சேர்த்து மொத்தம் 1,12,154 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 1.1.2021ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, கடந்த 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 16.11.2020 முதல் 15.12.2020 வரை திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,531 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான இரண்டு சிறப்பு முகாம்களை சேர்த்து மொத்தம் 1,12,154 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சுருக்க முறை திருத்தம், 2021ல் பெறப்பட்ட 6, 7, 8 மற்றும் 8ஏ படிவங்கள் தொடர்பான அறிக்கைகள் முறையே படிவங்கள் 9, 10, 11 மற்றும் 11 ஏக்களில் திருச்சி மாவட்ட இணையதள முகவரியில் (tiruchirappalli.nic.in < http://tiruchirappalli.nic.in/ >) நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 5.12.2020 வரை பெறப்பட்ட மொத்த படிவங்கள் 60,583 பற்றிய தொகுதி வாரியாக தினசரி பெறப்பட்ட படிவங்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியல் விபரங்கள் சென்ற 10.12.2020 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியனருக்கும் உரிய ஒப்பம் பெற்று ஒப்படை செய்யப்பட்டன.

மேலும், இதுவரை பெறப்பட்ட மொத்த படிவங்களான 1,12,154ல் இனவாரியான விபரங்கள் படிவம்-6, 6ஏ, 7, 8 மற்றும் படிவம் 8ஏ-களின் எண்ணிக்கை முறையே 80547, 97,441, 14,625 மற்றும் 9,532 ஆகும். மேலும், 20.1.2021 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்ல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் அத்தேதிக்குள் நேர்மையாகவும், நியாயமாகவும் நிறைவடைந்து விடும். இதுவரை பெறப்பட்ட படிவங்களின் விவரங்கள் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை அனைத்து பொதுமக்கள், மனுதாரர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்கண்ட இணையதள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : voter camps ,festival ,Christmas ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!