- சோனி
- இளையராஜா
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட்
- எதிரொலி பதிவு
- ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ்
சென்னை: இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருமானம் எவ்வளவு? என வருமானம் தொடர்பான விவரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். எனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. தனது பாடல்களை சோனி நிறுவனம் தவறாக பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
