×

எம்எல்ஏ பூண்டி கலைவாணன் பேச்சு நீடாமங்கலத்திலிருந்து 1,250 டன் நெல் மூட்டைகள் நாமக்கல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம், டிச.24: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்த நெல்களை தனியார் முகவர்களிடமிருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் பெற்று மத்திய சேமிப்பு கிடங்கு மற்றும் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கிறது. பின்னர் அவற்றை பொது விநியோகத்திற்கு பகிர்ந்தளிக்க அரசு பிற மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அரவை பணிகள் முடிந்து அரிசியாக பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி கோவிலூர் நவீன அரிசி ஆலை, சுந்தரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சேமிப்புமையங்களிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் பொது ரக அரிசி மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து 21 ரயில் பெட்டி(வேகன்)களில் நாமக்கல் மாவட்டத்திற்கு பொது விநியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : MLA ,Boondi Kalaivanan ,Namakkal ,Needamangalam ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...