×

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.24: வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மன்னார்குடி அருகே சித்தேரி மறவாக்காடு, ராதாநரசிம்மபுரம் கிராமங்களில் காவிரி உரிமை மீட் புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டதிருத்தங்களை திரும்ப பெற வேண்டும், வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500ஐ குறைந்த பட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், விவ சாயிகளின் அனைத்து விதமான கடன்களையும் முழுமையாக ரத்து செய்து 4 சதவீத வட்டியுடன் கூடிய புதிய பயிர் கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன் னார்குடி அருகே சித்தேரி மறவாகாடு, ராதாநரசிம்மபுரம் ஆகிய கிராமங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் பாரதிச்செல்வன், கலைச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்து கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : protests ,Cauvery Rights Redemption Committee ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...