வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 9 ம் நாள் விழா மாடு மேய்க்கும் கோலத்தில் பெருமாள் சேவை

மன்னார்குடி, டிச. 24: மன்னர் விஜய ராகவ நாயக்கர் பெருமாளுக்கு வழங்கிய வைர ஆபரணங்கள் மற்றும் மாராட்டிய அரசர்கள் குறிப்பாக சரபோஜி ராஜா பெருமாளுக்கு வழங்கிய ரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், சோழர் காலத்தில் ராஜாதி ராஜன் என்கிற சோழ மன்னர் வழங்கிய தங்க கல் பதித்த ஆபரணங்கள் அத்துடன் குவலயா பீடம் என்கிற யானையை வதைத்து அதனுடைய தந்தத்தை இடது பாகத்தில் சாற்றிற்கொண்டு ராம பணத்தை ஏற்றி கொண்டு கோபாலனுக்கே உரிய வேத்திரம் என்கிற சாட்டையை கையில் ஏந்தி அதன் பிறகு லட்சுமி ஆரத்தோடு மகா ராஜாதி ராஜனாக சீர்மிகு ராஜகிரிடம் தரித்து கொண்டு பகல்பத்து 9ம் நாளான நேற்று பெருமாள் மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (25ம்தேதி) பரமபத வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து அன்று காலை 8 மணி முதல் முக கவசம் அனிந்தபடி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால் அர்ச்சனைக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>