×

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை : இயக்குனரகம் எச்சரிக்கை

சென்னை : காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் செப்​டம்​பரில் காலாண்டு தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த கல்வி ஆண்​டுக்​கான காலாண்டு தேர்வு கடந்த செப். 10-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. இந்த தேர்​வு​கள் இன்​றுடன் முடிவடைகின்​றன. சில வகுப்​பு​களுக்​கான தேர்​வு​கள் நேற்றே முடிந்​து​விட்​டன. இதையடுத்​து, மாணவர்​களுக்கு காலாண்டு விடு​முறை நாளை (செப்​.27) முதல் அக்​.5-ம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விடு​முறை​யில்​தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்​டாடப்​படு​கின்​றன.

இந்த விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​. 6-ம் தேதி திறக்​கப்பட உள்​ளன. இதற்​கிடையே, காலாண்டு விடு​முறை​யில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதன் எதிரொலியாக காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்டி தனியார் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Private School Directorate ,Tamil ,Nadu ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...