காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.24: காலமுறை ஊதியம் வழங்கிட கோரி திருவாரூரில் நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோருக்கான பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>