×

தங்கமயில் தங்க திருவிழா: நெக்லஸ், மாலை, வளையலுக்கு சேதாரத்தில் அதிரடி தள்ளுபடி

சென்னை: தங்கமயில் ஜூவல்லரியின் தங்கத் திருவிழாவை முன்னிட்டு மாலை, நெக்லஸ் மற்றும் வளையலுக்கு சேதாரத்தில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 66 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

35 லட்சத்திற்கும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக இன்று (26ம் தேதி) முதல் 3 நாட்கள் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து மாலை, நெக்லஸ் மற்றும் வளையலுக்கு மிகக் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்கமயில் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 7.99 சதவீதம் மட்டும். 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 10.99 சதவீதம் மட்டும். 20 சதவீதத்திற்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் மட்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thangamayil Gold Festival ,Setaram ,Chennai ,Thangamayil Jewellery's Gold Festival ,Thangamayil Jewellery ,Madurai ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!