×

புதுகை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை நவீனப்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை,டிச.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை நவீனப்பத்தி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை மன்னர்கள் ஆட்சி செய்தால் மிக பழமையான சுற்றுலா தளங்கள் உள்ளது. சித்தன்னவாசல், திருமயம், குடியியான்மலை, விராலிமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தலங்கள் மிகவும் பழமையானவைகளில் ஒன்று. குறிப்பாக சித்தன்னவாசலில் உள்ள குகை ஓவியங்கள் மிகவும் பழமையான பிரசித்தி பெற்றது. இந்த சுற்றுலா தளத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் காத்திருக்கும் அரை உள்ளிட்ட போதிய அடிப்டை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் சில சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதிகளை செய்து தகுந்த முறையில் மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tourist sites ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்