திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை கோயில் நிர்வாகம் அறிவிப்பு

புதுக்கோட்டை, டிச.24: திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா வைரஸ் பரவலைத்தவிர்க்கும் வகையில் அதிகாலை வழக்கமாக நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, சாமி புறப்பாடு ஆகியன ஆகம விதிப்படி நடைபெறும். உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதன்பிறகு காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் வந்து செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுக்கோட்டை கோயில்கள் செயல் அலுவலர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: