காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச. 24: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் ரெங்கசாமி தொடங்கி வைத்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories:

>